கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
காசு வாங்கிய நாயே.. ஓட்டு போட்டியா? உச்சகட்ட கோவத்திற்கு சென்ற வேட்பாளர்!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர்த்து, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகின.
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டுவது வழக்கம். ஆனால், மதுரை சேட்டம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோதுவார்பட்டி ஊராட்சியில் 2 வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்டில் சின்னத்தில் முருகேசன் என்பவர் போட்டியிட்டார். ஆனால் அவர் அந்த தேர்தலில் டெபாசிட் இழந்தார்.
இதனையடுத்து தனக்கு வாக்களிக்காமல் தோற்கடித்த வாக்காளர்க்கு நன்றி தெரிவித்து, நீங்கள் இப்படி செய்வீர்கள் என நினைக்கவில்லை எனவும் அந்த போஸ்டரில் எழுதியுள்ளார்.
அதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கீழப்பனையூர் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு பெற முயன்ற வேட்பாளர் ஒருவர் தோல்வி அடைந்ததால் பணம் வாங்கியவர்களை திட்டி போஸ்டர்கள் ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் "காசு வாங்கிய நாயே.. ஓட்டு போட்டியா?" என அந்த போஸ்டரில் எழுதியுள்ளார்.