வங்கியில் புகுந்து ஊழியர்களை தாக்கியதன் பின்னணி இதுதானா! பாவம் அந்த முதியவர்.

வங்கியில் புகுந்து ஊழியர்களை தாக்கியதன் பின்னணி இதுதானா! பாவம் அந்த முதியவர்.



Canara bank varivelan kovai

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேலன். இவர் தனது நிருவனத்தை விரிவாக்கம் செய்ய கோவையில் உள்ள கனரா வங்கியை ஒன்றை நாடியுள்ளார். அப்போது அங்கு இடைத்தரகராக வேலை பார்த்து வந்த குண வேலன் என்பவரை சந்தித்துள்ளார்.

குண வேலன், வெற்றிவேலன் என்பவருக்கு லோன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். மேலும் அதற்கு முன் பணமாக 3 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கூறி பணத்தை பெற்றுள்ளார் குண வேலன்.

ஆனால் பணம் வாங்கி 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் லோன் வராததால் குண வேலனை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவரிடமிருந்து எந்த ஒரு தகவலும் வராததால் அதிர்ச்சி அடைந்தார் அந்த வயதான வெற்றி வேலன். மேலும் பணத்தை கொடுத்து விட்டு தொழிலிலும் நஷ்டம் அடைந்ததால் மன வேதனையுக்கு ஆளானார்.

kovai

அதனை அடுத்து வெற்றி வேலன் சுங்கம் பகுதியில் உள்ள கனரா வங்கிக்கும் ஏர் பிஸ்டலுடன் மற்றும் கத்தியுடன் சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்த போது புரோக்கர் குண வேலன் வங்கி மேலாளர் சந்திர சேகர் என்பவருடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து கோபமாகியுள்ளார்.

உடனே உள்ளே சென்று குணவேலனை தாக்கியுள்ளார். அதனை தடுக்க வந்த சந்திரசைகரனையும் கடுமையாக தாக்கியுள்ளார். இருவரின் அலாரம் சத்தம் கேட்டு வங்கி ஊழியர்கள் அங்கு வந்த வெற்றிவேலனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அதனை அடுத்து வங்கி மேலாளர் சந்திரசேகரன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வெற்றி வேலனை 3 பிரிவுகளின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெற்றிவேலன் என்ற பெரியவர் பணம் கொடுத்து ஏமாந்தது மட்டுமின்றி கைதும் செய்யப்பட்ட சம்பவம் வெற்றி வேலனுக்கு மிகப்பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.