சரியில்லாத மருந்துகளை விற்பனை செய்றாங்களா?.. ஒரே Call-ல் அவர்களை ஓட விடலாம்..! வாட்சப் எண் இதோ..!!
சரியில்லாத மருந்துகளை விற்பனை செய்றாங்களா?.. ஒரே Call-ல் அவர்களை ஓட விடலாம்..! வாட்சப் எண் இதோ..!!

தொழில்நுட்பத்தின் புதுமைக்கேற்ப அரசுதுறை நிர்வாகங்களும் தொடர்ந்து தங்களை புதுமையாக்கி கொண்டு வருகின்றன. பல அரசுதுறை சார்ந்த நிறுவனங்களில் வாட்ஸ்அப் மூலமாக புகாரளிக்க எண்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மருந்து கட்டுப்பாட்டுதுறையிலும் வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மருந்து கட்டுப்பாட்டுதுறைக்கு மக்கள் புகார்களை முந்தைய காலங்களில் நேரடியாகவும், கடிதம் வாயிலாகவும் கொடுத்து வந்தனர்.
ஆனல தற்போது 9445865400 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் புகார்கள் அனுப்பினால் அது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.