பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் மறந்துடாதீங்க.! இன்று முதல் ஆரம்பமாகிறது முன்பதிவு.!

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் மறந்துடாதீங்க.! இன்று முதல் ஆரம்பமாகிறது முன்பதிவு.!


bus booking for pongal festival

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட போது, பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

கொரோனா பேரிடர் காலத்திலும் தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியது. ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன்படி பொங்கல் பண்டிகைக்கு அரசு பேருந்து முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. 

Pongal

பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அரசு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்குகிறது. இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு போக்குவது துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.