தமிழகம் சமூகம்

ஒரத்தநாடு அருகே நேருக்கு நேர் மோதிய தனியார் பேருந்துகள்; 60க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்!

Summary:

bus acident in orathanadu

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அதிவேகமாக சென்ற இரண்டு தனியார் நிறுவன பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 60க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டைக்கு சென்ற தனியார் பேருந்து PLA மற்றும் பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருந்த மீரா என்ற தனியார் பேருந்து இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.

பொதுவாக இந்த வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்துகள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு மிகவேகமாக செல்வதுதான் வழக்கம் என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் எப்பொழுதுமே பயணிகள் மிக அச்சத்துடன் பயணிப்பதாக புகார் எழுந்துள்ளது. தனியார் நிறுவன பேருந்துகள் தங்களுக்குள் ஏற்படும் போட்டியின் காரணமாகவே இவ்வாறு வேகமாக ஓட்டி செல்வதாக மக்கள் கூறுகின்றனர்.

அவ்வாறு போட்டி போட்டுக்கொண்டு ஓட்டி சென்றதால் தான் இந்த விபத்து நடந்துள்ளது என்பது தெரியவருகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டியின் காரணமாக இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த பயணிகள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


Advertisement