தமிழகம்

பாலியல் தொழிலுக்காக காரில் அழைத்துச்செல்ப்பட்ட சிறுமி! வழியில் பார்த்த சகோதரனின் துணிச்சல் செயல்!

Summary:

Brother saved sister from car

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் சரக்கு ஏத்தும் வாகனம் ஓட்டிவந்துள்ளார். இந்தநிலையில் நேற்று நள்ளிரவு வழக்கம்போல் கோயம்பேடு பகுதியில் சவாரிக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு காரில் இரண்டு நபர்களுடன் 15 வயது சிறுமி பயத்துடன் அமர்ந்திருப்பதை பார்த்துள்ளார். மேலும் அந்த சிறுமி தனது சகோதரி உறவுமுறை கொண்ட பெண்போலவே தெரிந்துள்ளது.

இதனால் சந்தேகத்துடனும், அதிர்ச்சியுடனும் சீனிவாசன் அந்த காரின் அருகே சென்று உள்ளே எட்டிப்பார்த்துள்ளார். அப்போது அவரது சகோதரி உறவுமுறை கொண்ட பெண்ணை பார்த்து அதிர்ச்சியுடன், நீ எதற்காக காரில் அமர்ந்துள்ளாய் என கேட்டுள்ளார். அவர் கேட்ட அடுத்த நொடியே காரில் இருந்த நபர்கள் காரை வேகமாக எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் தனது   வாகனத்தில் அவர்களை வேகமாக பின்தொடர்ந்தார். அப்போது அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே காரின் குறுக்கே அவரது வாகனத்தை நிறுத்தி அவர்களை தடுத்து நிறுத்தினார்.

பின்னர் காரில் இருந்தவர்களிடம் சீனிவாசன் l வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசார் வந்ததும், காரில் இருந்த நபர்களில் பாசில் என்பவர் தப்பியோடியுள்ளார். போலீசாரிடம் சிக்கிய பிரகாஷ் என்பவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பிரகாஷ் முன்னாள் குற்றவாளி என்பது தெரியவந்தது. மேலும், பெண் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அழைத்துச்சென்றதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் தலைமறைவான பாசல் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement