தங்கையின் தாலியை கழட்டவைத்த அண்ணன்-தம்பி சண்டை.! பரிதாபமாக போன 2 உயிர்கள்.!

தங்கையின் தாலியை கழட்டவைத்த அண்ணன்-தம்பி சண்டை.! பரிதாபமாக போன 2 உயிர்கள்.!


brother-killed-sister-in-law

தேனி மாவட்டம் கம்பம் சேர்ந்த வடிவேல் வடிவேல் என்பவருக்கு சிவக்குமார் (வயது 25), சங்கர் (22) ஆகிய 2 மகன்களும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர். சங்கீதாவுக்கு மதுரை பேரையூரைச் சேர்ந்த காளிராஜ் என்பவருடன் திருமணமாகி தனது தந்தை வீட்டருகே வசித்து வந்துள்ளார்.

வடிவேலின் மகன்கள் சிவக்குமார் மற்றும் சங்கர் ஆகிய இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவது வழக்கம். இந்தநிலையில், நேற்று இரவு வழக்கம் போல் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது வீட்டுக்கு வந்த அவர்களது மைத்துனர் காளிராஜ் தகராறை விலக்கி சமாதானப்படுத்த முயன்றார்.  அப்போது தனது கையில் வைத்திருந்த கத்தியால் காளிராஜை எதிர்பாராதவிதமாக சங்கர் குத்தினார்.

இதில் படுகாயமடைந்த காளிராஜ் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து போலீசார் சங்கரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டுக்குச் சென்றனர். போலீசார்  வருவதை அறிந்ததும் பயந்துபோன சங்கர் தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.