வெறும் 5 பைசாவுக்கு சுட சுட பிரியாணி! கடையில் அலைமோதும் கூட்டம்.
வெறும் 5 பைசாவுக்கு சுட சுட பிரியாணி! கடையில் அலைமோதும் கூட்டம்.

இந்த உலகில் உள்ள அணைத்து ஜீவராசிகளுக்கும் மிகவும் அவசியமான ஓன்று உணவு. அனைவர்க்கும் உணவு கிடைக்கவேண்டும் என்றும், உணவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும் உலகம் முழுவதும் ஆண்டு தோறும் அக்டோபர் 16 (இன்று) உணவு தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் உலக உணவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள பிரபல உணவகம் ஒன்று 5 பைசாவுக்கு பிரியாணி தருவதாக அறிவித்துள்ளது. தொப்பி வாப்பா என்ற அந்த பிரியாணி கடை வாடிக்கையாளர்கள் பழைய 5 பைசா நாணயத்தை கொட்டுவந்து கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசமாக தரப்படும் என அறிவித்துள்ளது.
இதனை அடுத்து பழைய 5 பைசா நாணயங்களுடன் மக்கள் கூட்டம் அந்த கடையில் அலைமோதியது. இதேபோல் திண்டுக்கலில் உள்ள பிரியாணி கடை ஒன்றும் 5 பைசாவுக்கு பிரியாணி தருவதாக அறிவித்துள்ளது. உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், பழைய பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் இந்த சலுகையை அறிவித்ததாக உணவாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.