திருமணத்திற்கு மண்டபம் புக் செய்ய சென்ற மணமகள்: திடீர் விபத்தில் பரிதாப பலி..!

திருமணத்திற்கு மண்டபம் புக் செய்ய சென்ற மணமகள்: திடீர் விபத்தில் பரிதாப பலி..!


bride, who went to book the hall for the wedding, died in a sudden accident

காஞ்சீபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மூத்த மகள் பிரியங்கா (30). இவர் எம்.இ படித்துள்ளார். இவருக்கு கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மணமகன் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். செல்வம் தனது மகளின் திருமணத்தை திருப்பதியில் நடத்த விரும்பினார்.

இந்த நிலையில், திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு திருமண மண்டபத்தை முன்பதிவு செய்வதற்காக பிரியங்கா, அவரது பெற்றோர்கள் மற்றும் சித்தப்பா மகன் ஆகியோர் நேற்று முன்தினம் தங்களுக்கு சொந்தமான காரில் திருப்பதிக்கு புறப்பட்டனர். காரை செல்வம் ஓட்டி சென்றுள்ளார். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி வரை செல்வம் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

இதன் பின்னர் அவர் சோர்வடைந்ததால் நகரியில் இருந்து பிரியங்கா காரை ஓட்டிச் சென்றார். திருப்பதி மாவட்டம் வடமாலப்பேட்டை மண்டலம் அஞ்சேரம்மன் கோவில் பகுதியை கடந்த போது அங்கிருந்த வேகத்தடை அருகில் கார் பிரியங்காவின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த எதிர்பாராத விபத்தில் படுகாயம் அடைந்த பிரியங்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடைய பெற்றோர்கள் காயங்கள் எதுவும் இன்றி உயிர்த்தப்பினர். ராஜூவிற்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வடமாலப்பேட்டை காவல்தூறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரியங்காவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த வடமாலப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.