காதலனோடு ஹோட்டல் அறையில் தங்கிய காதலி! காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி!

boy-suicide-in-kutrralam-lodge-for-love-failure


boy-suicide-in-kutrralam-lodge-for-love-failure

நாட்டில் நாளுக்கு நாள் காதல் சம்பவங்களும் அதனால் ஏற்படும் கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் காதல் விவகாரத்தில் வீட்டை விட்டு ஓடிவந்த திருப்பூரை சேர்ந்த காதல் ஜோடியில் காதலன் மட்டும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், புளியம்பட்டியை சேர்ந்த ராஜா(18) என்ற வாலிபர் அங்கிருக்கும் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். அவருக்கும், அதே கல்லூரியில் உள்ள ஒரு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அதுவே காதலாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் இவர்கள் காதல் விவரம் வீட்டிற்கு தெரியவர, இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

suicide

இதனால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த காதல் ஜோடி, வீட்டை விட்டு வெளியேறி குற்றாலத்தில் உள்ள ஒட்டு லாட்ஜில் தங்கியுள்ளனர். இந்நிலையில் காலை எழுந்து பார்த்தால் காதலன் ராஜா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஹோட்டல் நிர்வாகத்திடம் இதை கூற, பின்னர் காவல் துறையினர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.