தமிழகம்

காதலியின் உடலை பார்க்க வந்த இடத்தில் காதலனுக்கு நேர்ந்த கொடூரம்..! நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

Boy murdered who went to see lover dead body in pondichery

தற்கொலை செய்துகொண்ட காதலியின் உடலை பார்க்க சென்ற காதலனை நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கோட்டக்குப்பத்தை சேர்ந்த ராகவன் என்ற வாலிபர் ஹைதராபாத்தில் சாப்டவேர் இஞ்சினியராக பணியாற்றி வருகிறார். ராகவனும், கோட்டக்குப்பத்தை சேர்ந்த அருணா என்ற பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்துவந்துள்ளனர், இவர்கள் காதலை அருணாவின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது.

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் காதலித்துவந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அருணாவின் பெற்றோர் அவரை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த அருணா இரு நாட்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காதலியின் தற்கொலை செய்தி கேட்டு, அவரது உடலை பார்ப்பதற்காக ராகவன் கோட்டக்குப்பத்திற்கு சென்றுள்ளார். அங்கு ராகவனை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், அவரை கடத்தி சென்று கோட்டைமேடு பகுதியில் வைத்து வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த கொலை குறித்து 2 தனிப்படை அமைத்து போலீசார் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.


Advertisement--!>