தமிழகம்

காதலிக்கு தாலிகட்ட வந்த மாப்பிள்ளைக்கு சரமாரி கத்திகுத்து.. காதலர் தப்பியோட்டம்..!

Summary:

காதலிக்கு தாலிகட்ட வந்த மாப்பிள்ளைக்கு சரமாரி கத்திகுத்து..காதலர் தப்பியோட்டம்..!

தனது காதலி புது மாப்பிள்ளை உடன் போட்டோ எடுக்க போட்டோ ஸ்டுடியோவிற்கு வந்ததால், ஆத்திரத்தில் புது மாப்பிள்ளையை சரமாரியாக கத்தியால் குத்தி இருக்கிறார் மணப்பெணின் காதலன்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி அடுத்த வேந்தன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டி முனி, சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. பாண்டி முனியும் பிரியதர்ஷினியும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் சம்பாதிக்கவில்லை ஆனாலும் தடையை மீறி இருவரும் காதலித்துள்ளனர்.இதையறிந்த  பிரியதர்ஷினியின் பெற்றோர், உடனே வேறு இடத்தில் திருமணம் முடிக்க முடிவெடுத்து நெற்குப்பையை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு பேசி முடித்துள்ளனர். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் , திருமண பத்திரிக்கை அடிக்கவும், டிஜிட்டல் பேனர்கள் போடுவதற்கும் புகைப்படம் வேண்டும் என்று பாலமுருகனும் பிரியதர்ஷினி அவர்களது நண்பர்களுடன் ஸ்டுடியோவிருக்கு புகைப்படம் எடுக்க சென்றுள்ளனர்.

இது தெரிந்ததும் ஆத்திரத்தில் பாண்டி முனி அவரது சகோதரர் நண்பர்களை அழைத்துக் கொண்டு அங்கு சென்றிருக்கிறார். அப்போது பிரியதர்ஷினி மற்றும் பாலமுருகன் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பால முருகனையும் அவரது நண்பர்களையும்  சரமாரியாக குத்தி இருக்கிறார் பாண்டி முனி.

இதில் படுகாயமடைந்த மூன்று பேர் பொன்னமராவதி அரசு மருத்துவமனையிலும், இரண்டு பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொன்னமராவதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பாண்டி முனியையும் அவரது நண்பர்கள் தேடி வருகின்றனர்.


Advertisement