அரசியல் தமிழகம்

அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட இளைஞர் கைது! சென்னை விமான நிலையத்தில் அதிரடி !

Summary:

boy arrested in chennai airport for meme against jeyakumar

தமிழக மீன்வளத்துறை அமைச்சரை ஜெயக்குமார் கடந்த 2017ஆம் ஆண்டு விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட இளைஞரை காவல்துறையினர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்துள்ளதாக அதிமுக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சமூக வலைதளங்களின் பயன்பாடு இன்று அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் என பல துறையை சேர்ந்தவர்களை மிகவும் எளிதாக கார்ட்டூன், மீம்ஸ் ஆகியவை மூலம் கேலியும் கிண்டல்களும் செய்யப்படுகின்றன. 

தொடர்புடைய படம்

குறிப்பாக இந்த காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் மிகவும் அல்லல்படுபவர்கள் தமிழக அமைச்சர்கள் தான். அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் கிண்டல் செய்து சமூகவலைத்தளத்தில் பலர் வெளியிடுகின்றனர். அமைச்சர் செல்லூர் ராஜு, ஜெயக்குமார் போன்றோர் அடிக்கடி இந்த விவகாரத்தில் சிக்குகின்றனர்.

இதைப்போன்றே கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்து என்ற இளைஞர் அமைச்சர் ஜெயக்குமாரை கிண்டல் செய்து கார்ட்டூன் வெளியிட்டதாக தெரிகின்றது. இத்தனை நாட்கள் சிங்கப்பூரில் இருந்து வந்த அந்த இளைஞர் இன்று சென்னை வந்துள்ளார். அவர் சென்னைக்கு வருவதை அறிந்த காவல்துறையினர் சென்னை விமான நிலையத்தில் வீரமுத்துவை கைது செய்துள்ளதாக அதிமுக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 


Advertisement