தாய் என்றும் பாராமல்!.. மகன் செய்த காரியத்தால் பரிதாபமாக உயிரிழந்த பெண்..!

தாய் என்றும் பாராமல்!.. மகன் செய்த காரியத்தால் பரிதாபமாக உயிரிழந்த பெண்..!


Both attacked the mother with a stick and an iron pipe

கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்குப்பம் அருகேயுள்ள பாக்கம்பாடி தெற்கு காட்டுகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி வேலம்மாள் (60). இந்த தம்பதியினருக்கு சுரேஷ் (31), வேல்முருகன் (29) என்ற இரண்டு மகன்களும், செல்வி என்ற மகளும் உள்ளனர். மகள் செல்விக்கு திருமணம் முடிந்து கணவரோடு வசித்து வருகிறார்.

முருகேசன் கடந்த 20 வருடங்களுக்கு முன் மரணமடைந்த நிலையில், வேலம்மாள் தனது மகன்கள் மற்றும் மகளை வளர்த்து வந்ததுள்ளார். இதற்கிடையே, குடும்ப கடன் தொகை ரூ.17 லட்சத்தை திருப்பி அடைக்குமாறு கடந்த 2021 ஆம் ஆண்டு வேலம்மாள் தனது மகன்களிடம் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து கடந்த 4 மாதங்களுக்கு முன் அண்ணன் தம்பியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலை மீண்டும் கடன் விவகாரம் குறித்து அண்ணன், தம்பிக்குள் ஏற்பட்ட விவாதம் தகராறாக முற்றியது. அப்போது, மூத்தமகன் சுரேஷ் மற்றும் அவர்களது உறவினர் கவுதம் (29) ஆகிய இருவரும் கட்டையாலும், இரும்பு பைப்பாலும் வேலம்மாளை தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த வேலம்மாளை மீட்ட உறவினர்கள், அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வேலம்மாள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த  கீழ்குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.