யாருக்கும் தெரியாமல் இருக்க பெற்ற குழந்தையை கொன்ற தாய்; இன்று ஊருக்கே தெரிய வந்தது எப்படி?

யாருக்கும் தெரியாமல் இருக்க பெற்ற குழந்தையை கொன்ற தாய்; இன்று ஊருக்கே தெரிய வந்தது எப்படி?


born baby killed and thrown in garbage bin

சென்னை வேளச்சேரி கன்னிகாபுரம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தின் அருகே கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி ஒரு பச்சிளம் குழந்தை குப்பைத்தொட்டியில் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த குழந்தையின் சடலத்தை பார்த்தவர்கள் கிண்டி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து பச்சிளம் குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை நடத்த துவங்கினர். மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்ததில் குழந்தையானது மூச்சுத்திணறி இழந்திருப்பதாகவும், அதன் கழுத்தை நெரித்து கொலை செய்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் தகவல் கொடுத்தனர். 

தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கன்னிகாபுரத்தைச் சேர்ந்த வசந்தி என்ற 22 வயது பெண் கர்ப்பமாக இருந்ததும் அவருக்கு பிறந்த குழந்தை வீட்டில் இல்லை என்ற தகவலும் அவர்களுக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து வசந்தியின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் வசந்தி மற்றும் அவரது தாயார் விஜயாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததில் குழந்தை வசந்திக்கு பிறந்ததுதான் என்பது தெரியவந்தது.

இதன் பின்னணி என்ன என்று காவல்துறையினர் அவர்களை விசாரிக்க முழு விவரமும் தெரிய வந்தது. துப்புரவு பணியாளரான விஜயாவின் மகள் வசந்தியும் வேலைக்கு சென்று வந்துள்ளார். வசந்தி வேலை பார்த்த இடத்தில் போரூரை சேர்ந்த ஜெயராஜ் வயது 25, என்பவருடன் நெருங்கி பழகி உள்ளார். இவர்களின் தகாத உறவில் வசந்தி கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் தான் கர்ப்பமான விஷயத்தை வீட்டில் யாருக்கும் சொல்லாமல் மறைத்துள்ளார் வசந்தி.

born baby killed and thrown in garbage bin

நாளடைவில் வசந்தியின் வயிறு பெரியதாவதை பார்த்த தாயார் விஜயா அவளிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான் வசந்தி கர்ப்பமாக இருப்பது விஜயாவிற்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜயா வசந்தியை திட்டியதோடு இந்த கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று கேட்டுள்ளார். அதற்கு வசந்தி தன்னுடன் பணிபுரியும் ஜெயராஜுடன் ஏற்பட்ட பழக்கத்தால் தான் கர்ப்பம் அடைந்ததாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வசந்தியின் குடும்பத்தினர் ஜெயராஜிடம் பேசவே அவரும் வசந்தியை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளார். 

ஆனால் திருமணத்திற்கு முன்பே தன்னுடைய மகள் கர்ப்பமாகி விட்டால் என்ற தகவல் வெளியே தெரிந்தால் அவமானம் ஏற்பட்டுவிடும் என்று எண்ணிய விஜயா மகளின் கர்ப்பத்தைக் கலைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் கர்ப்பம் கலைந்தால் வசந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததால் வசந்தியை வீட்டை விட்டு வெளியில் எங்கும் அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து பார்த்துள்ளார் விஜயா.

இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி வசந்திக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த தகவலை விஜயா ஜெயராஜ்க்கு தெரிவித்துள்ளார். அதன் பிறகு அனைவரும் சேர்ந்து குழந்தையை கொன்று விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். வீட்டில் இருந்த பெரிய அகலமான பாத்திரத்தில் குழந்தையை அமுக்கி வைத்துள்ளனர். பிறகு அந்த பாத்திரத்தை மூடி வைத்ததும் பச்சிளம் குழந்தை ஆனது மூச்சு திணறி இறந்துள்ளது.

பின்னர் இறந்த குழந்தையை 200 அடி தூரத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். இந்த தகவல்களை பெற்ற காவல்துறையினர் விஜயா, வசந்தி, ஜெயராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

எத்தனையோ பேர் குழந்தை வரம் வேண்டி தவித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இப்படியும் ஒரு தாய் இருந்துள்ளார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.