தமிழகம்

முதல்வர் பழனிசாமி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! யார் அந்த நபர்.?

Summary:

சென்னை மற்றும் சேலத்திலுள்ள முதல்வர் பழனிசாமி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்

சென்னை மற்றும் சேலத்திலுள்ள முதல்வர் பழனிசாமி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சேலத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இன்று காலை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு  மர்ம நபர் ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்து மிரட்டல் விடுத்தார். 

இதனையடுத்து முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சரின் 2 வீடுகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில்வெடிகுண்டு ஏதும் இல்லை என காவல்துறையினரிடம் உறுதி செய்துள்ளனர். மிரட்டல் விடுத்த அந்த நபர் திருப்பூரில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


Advertisement--!>