தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுமி; யாருக்கும் தெரியாமல் உடலை எரித்த உறவினர்கள்: சைக்கிள் கேப்பில் உள்ளே புகுந்த போலீஸ்..!

தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுமி; யாருக்கும் தெரியாமல் உடலை எரித்த உறவினர்கள்: சைக்கிள் கேப்பில் உள்ளே புகுந்த போலீஸ்..!


body of the girl who committed suicide was cremated without the knowledge of the police

தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் உடலை காவல்துறையினருக்கு தெரியாமல் தகனம் செய்த சம்பவத்தால் பண்ருட்டி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் ரக்ஷிதா (15). இவர் அதே பகுதியிலுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பொது தேர்வு முடிந்து தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் எதுவும் தெரியவில்லை. அவரது உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளிக்காமல் உடலை எரித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில் சிறுமி தற்கொலை செய்து கொண்டதும், அவரது உடலை அவசர அவசரமாக தகனம் செய்ததும் உறுதியானது.

இதனை தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து  மருத்துவர் குழுவினர் வரவழக்கப்பட்டனர். இதன் பின்பு பண்ருட்டி வட்டாட்சியர் சிவகார்த்திகேயன், மாவட்ட துணை காவல் ஆய்வாளர் சபியுல்லா ஆகியோர் முன்னிலையில் பிணம் எரிக்கப்பட்ட இடத்திற்கு சென்ற மருத்துவர் குழுவினர் அங்கிருந்த எலும்புகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம்  ஓறையூர் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.