AC ரூம்ம விட்டு வெளில வாங்க!! என்கூட விவாதிக்க தயாரா? தயாநிதி மாறனுக்கே சவால் விடும் வினோஜ் பி செல்வம்.

AC ரூம்ம விட்டு வெளில வாங்க!! என்கூட விவாதிக்க தயாரா? தயாநிதி மாறனுக்கே சவால் விடும் வினோஜ் பி செல்வம்.



bjp-vinoj-p-selvam-viral-election-campaign

மத்திய சென்னை தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் வினோஜ் பி செல்வம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் அனல்பறக்க பேசிவருகிறார்.

இந்தியா முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளநிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

வினோஜ் பி செல்வம்:

பாஜக சார்பாக மத்திய சென்னை தொகுதியில் வினோஜ் பி செல்வம் களமிறங்குகிறார். தனது 21 வயதில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்ற தொடங்கிய இவர், இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர், இளைஞர் அணி தலைவர், தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் என பல பொறுப்புகளில் திறம்பட செயலாற்றியதை தொடர்ந்து தற்போது மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் தயாநிதி மாறனை எதிர்த்து பாஜக சார்பாக போட்டியிடுகிறார்.

ரோட்டு கடையில் சாப்பாடு:

மத்திய சென்னை தொகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் இறங்கியுள்ள வினோஜ் பி செல்வம், நேற்று நெல்லிக்குப்பம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அங்கிருந்த சாலையோர கடையில் பூரி சாப்பிட்டவாறு தனது தேர்தல் பரப்புரைகளை அங்கிருந்தவர்களிடம் எடுத்து கூறினார்.

அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரம்:

இன்று துறைமுகம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வினோஜ் பி செல்வம், தயாநிதி மாறனுக்கு எதிரான தனது கருத்துக்களை அடுக்கடுக்கா எடுத்து கூறினார். AC ரூமில் சட்டை கசங்காமல் வேலைபார்க்கும் அவருக்கு சாதாரண மக்களின் கஷ்டம் எப்படி தெரியும்? தயாநிதி மாறன் செல்லும் ஏரியா அனைத்திலும் மக்களிடம் இருந்து அவருக்கு எதிர்ப்பே வருவதாகவும், தயாநிதி மாறனுக்கு எதிராக மக்கள் அவரிடம் கேள்வி கேட்குறாங்க, எதிர்க்குறாங்க என கூறிய அவர், உடனே அவர்கள் பணம் தருகிறோம், இலவசம் தருகிறோம் என பொய் சொல்லி ஏமாற்ற பார்ப்பதாகவும், ஒருபோதும் நாங்கள் வளர்ச்சி தருகிறோம் என அவர்கள் கூறியதே இல்லை என தனது கடுமையான வாதங்களை முன்வைத்தார் வினோஜ் பி செல்வம்.

குடிசை பகுதியில் இருந்து மாற்றி அடுக்கு மாடி குடியிருப்புக்கு கொண்டுசெல்வோம் என கூறியது கிடையாது, குழந்தைகளை நன்கு படிக்கவைப்போம் என்று சொல்வது கிடையாது, உங்கள் வாழ்வாதாரம் மாறு என்று சொல்வது கிடையாது, எதெற்கெடுத்தாலும் இலவசம் இலவசம் என்று குடுத்துவிட்டு அதையே அவர்கள் சொல்லிக்காட்டுவதாகவும் பேசியுள்ளார் வினோஜ் பி செல்வம்.

Vinoj P Selvam

தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்த அவர், தனது தொகுதி மக்களுக்காக தயாநிதி மாறன் இதுவரை என்ன செய்துள்ளார்? மக்கள் தற்போதுவரை சுண்டெலிகளாக  இருப்பதாகவும், தயாநிதி மாறன் குடும்பத்தினர் மட்டும் பெருச்சாளிகளை போல் பெருத்துக்கொண்ட போவதாகவும் தனது அனல்பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார் வினோஜ் பி செல்வம்.

மேலும், மத்திய சென்னையின் வளர்ச்சி குறித்து தயாநிதிமாறனுடன் நேருக்குநேர் விவாதிக்க தயார். எந்த இடமாக இருந்தாலும் சரி, அங்கு சென்று விவாதத்தில் ஈடுபட தான் தயார் என பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் சவால் விடுத்துள்ளார்.