BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நாங்கள் இந்தியை திணித்தோமா?.. காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு; அண்ணாமலை பரபரப்பு பதில்.!
3 மொழிகள் பயில வேண்டும் என்பதுதான் மத்திய அரசுடைய கொள்கை; இந்தியை மத்திய அரசு திணிக்கவில்ல்லை என்று பாஜக மாநில தலைவர் பேசினார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
"அக். 30ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் தற்போது வரை இல்லை. நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். பிரதமர் அதனை பார்த்து பதில் தெரிவித்ததும் அறிவிப்புகள் வெளியாகும்.

திமுக அரசு நடத்தும் இந்தி எதிர்ப்பு போராட்டம் கபடநாடகம். இந்தி மொழியினை மத்திய அரசு திணிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இந்தி கட்டாயம் என்பது அம்பலப்படுத்தப்பட்டது. 3 மொழி பயில வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கை ஆகும்" என்று தெரிவித்தார்.