பாஜகவுடன் விசிக கூட்டணி வைக்க அண்ணாமலை மறைமுக அழைப்பா/.. திமுகவுக்கு டாட்டா காண்பிக்கும் திருமாவளவன்?.. அரசியலில் அதிரடி.!

பாஜகவுடன் விசிக கூட்டணி வைக்க அண்ணாமலை மறைமுக அழைப்பா/.. திமுகவுக்கு டாட்டா காண்பிக்கும் திருமாவளவன்?.. அரசியலில் அதிரடி.!



bjp-tn-annamalai-calls-vck-about-no-caste-union

 

விசிக தலைவர் திருமாவளவன் பாஜக மற்றும் சனாதன தர்மம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து இருக்கிறார். திமுக கூட்டணியில் அங்கமாக இருக்கும் திருமாவளவன், தேசிய அளவிலான அரசியலில் ஈடுபடவும் தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார். 

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரர் ராவ், குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் ஆகியோரையும் அவர் சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில், திருமாவளவனை புகழ்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார். 

இதுகுறித்து அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், "விசிக தலைவர் திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ் தொடர்பாக பல கருத்துக்களை கூறுகிறார். சனாதனம் தொடர்பாகவும் விமர்சிக்கிறார். இவர் கடந்த காலங்களில் வேறு கருத்துக்களை முன்வைத்தும் உண்டு. சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க திருமாவளவன் பாடுபடுகிறார். அதற்கான முறைகள், அர்த்தங்கள் மாறுகிறது. பாஜகவும் இதையே தனது கொள்கையில் மாறுபட்டு விரும்புகிறது.

bjp

எங்களுக்கும் திருமாவளவனுக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதனால் விமர்சித்து கொள்கிறோம். நல்ல சமுதாயத்தை உருவாக்க ஒரே சிந்தனையில் பயணம் செய்கிறோம். பாஜகவில் பட்டியல் சமூக தலைவர்கள், பிற்படுத்தப்பட்ட சமூக தலைவர்கள் வட இந்தியாவில் சாதியற்ற சமூகத்தை உருவாக்க பாடுபடுகிறார்கள். 

ஆகையால், எங்களின் அணிக்கு வரக்கூடாது என கூறவில்லை. அவர்களும் எங்களின் நண்பர்கள்" என்று தெரிவித்தார். இது அண்ணாமலை திருமாவளவனை பாராட்டி மறைமுகமாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அரசியல் மட்டத்தில் கூறப்படுகிறது.