"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
#சற்றுமுன் || டெல்லியில் இருந்து வந்த கட்டளை! ஆடிப்போன அண்ணாமலை!! பறிபோகும் பதவி?!
கடந்த மாதம், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் முடிவில், அக்கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இது அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி முறிவு விவகாரத்தில் பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ள தயார். தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப கட்சி கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறது. எதிர்வரும் தேர்தலுக்கு நமது தலைமையில் மட்டுமே கூட்டணி. அதில் பாஜக இருக்காது என அதிமுக தரப்பு தெரிவித்தது.
இது குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வந்தது. பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். திமுகவினர் இதனை அரசியல் நாடகம் என்று கூறினார்கள். கூட்டணி முறிவு விவகாரத்தில் மாறுபட்ட கருத்துக்களை அதிமுக சந்தித்தது.
இந்த நிலையில், அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி முறிந்தால் பாஜக தலைமை அண்ணாமலை மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் குறித்த நடவடிக்கையில் தலையிட வேண்டாம் என்று அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.