நண்பர்கள் அளித்த பரிசு.. மணமேடையிலேயே தேம்பித்தேம்பி அழுத மணமகன்..! அப்படி என்னதான் கொடுத்தாங்க?..! 

நண்பர்கள் அளித்த பரிசு.. மணமேடையிலேயே தேம்பித்தேம்பி அழுத மணமகன்..! அப்படி என்னதான் கொடுத்தாங்க?..! best-friends-giving-super-gift-for-our-friend

நண்பர்கள் கொடுத்த பரிசால் மணமகன் தேம்பிதேம்பி அழுத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கீரி பாண்டு. இவரின் மனைவி கௌரி. தம்பதிகளுக்கு அறிவழகன் என்ற மகன் இருக்கிறார். கீரி பாண்டு சில வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்து விட்ட நிலையில், தாயின் பராமரிப்பில் மகன் இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில் அறிவழகனுக்கும், மதி என்ற பெண்ணுக்கும் கடந்த 13-ஆம் தேதி கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

Kallakurichi District

அப்போது மணமக்களுக்கு பலரும் தங்களால் இயன்ற பணம், பொருட்களை கொடுத்தனர். அறிவழகன் தனது தந்தையின் மீது அதிக பாசம் கொண்டவராக இருந்த நிலையில், நண்பனின் மனதை புரிந்து கொண்ட நண்பர்கள் தந்தையின் உருவப்படத்தை பேனர் அச்சடித்து அதனை சிறிய கட்டவுட் போல வடிவமைத்து பரிசாக வழங்கியுள்ளனர். 

தனது தந்தையின் உருவப்படத்தை பார்த்த அறிவழகன் உணர்ச்சிவசப்பட்டு தேம்பித்தேம்பி அழத்தொடங்கியுள்ளார். இதனை வீடியோவாக எடுத்து அவரை, அவரின் நண்பர்கள் சமாதானம் செய்தனர். அத்துடன் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைகண்ட பலரும் தந்தை மீது இவ்வளவு பாசமா? என மனம் நெகிழ்ந்துள்ளனர்.