தமிழகம்

கோவில் வாசலில் பிச்சை எடுத்த 80 வயது மூதாட்டி.! அவரது பையை கண்டு பேரதிர்ச்சி அடைந்த ஊழியர்கள். ! ஏன் தெரியுமா?

Summary:

begger old lady have money and jewels

புதுச்சேரியில் காந்தி வீதியில் ஈஸ்வரன்  கோவில் ஒன்று அமைந்துள்ளது. அங்கு ஏராளமான முதியவர்கள் மற்றும் பலர் பிச்சை எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் அது பொது மக்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கோவில் முன்பு பிச்சை எடுத்து வந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

 இந்நிலையில் அங்கிருந்து 80 வயது நிறைந்த ஒருவரை அப்புறப்படுத்த முயன்றபோது அவரது கையிலிருந்த பை கீழே விழுந்தது. மேலும் பையிலிருந்து பணம் மற்றும் தங்க நகைகள் சாலையில் சிதறி விழுந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நகராட்சி ஊழியர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியின் பை முழுவதையும் சோதனை செய்து பார்த்தபோது அதில் 15 ஆயிரம் ரூபாய் பணம், வங்கி கணக்கு புத்தகம்,  தங்கத்தோடு,  முதியோர் பென்ஷன் கார்டு,  ரேஷன் கார்டு போன்றவை இருந்தது.மேலும் வங்கி கணக்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணம் இருந்தது.

இதனை தொடர்ந்து போலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட நிலையில்,  மூதாட்டி புதுச்சேரி வாழைக்குளம் பகுதியைச் சேர்ந்த பர்வதம் என்பது தெரியவந்தது. மேலும் அவர் கணவர் இறந்த பிறகே பிச்சை எடுத்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.


Advertisement