பிரச்சினை எல்லை மீறியதால்; ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன் மனைவி...!Because the issue is transgressive; Husband and wife committed suicide by hanging themselves in the same saree...

கணவன் மனைவி ஒரே சேலையில் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வசித்து வருபவர் திருப்பதி (51). இவரது மனைவி தீபா (42). இந்த தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவன் வீட்டில் உள்ளார். மகன் சென்னையில் வேலை பார்த்து வருவருகிறார்.

இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர். இவர்களது வீடு நேற்று மதியம் வரை திறக்கப்படாமல் இருந்ததால் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் அவர்கள் கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். 

அப்போது கணவன் மனைவி இருவரும் ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சோழவந்தான் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கணவன் மனைவி இருவரின் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கடன் பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.