தமிழகம்

தனது காதலியை நடுரோட்டில் சரமாரியாக வெட்டிய 19 வயது இளைஞர்! சென்னையில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.

Summary:

Attent to murder chennai

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் கம்யூட்டர் சென்டரில் படித்து வந்துள்ளார். அந்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று காலை கல்லூரி செல்லும் போது பின் தொடர்ந்து வந்துள்ளார். வந்தவர் திடீரென தன் கையில் வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணின் இரு கைகளையும் நடுரோட்டில் சராசரியாக வெட்டியுள்ளார்.

அதன் பிறகு அந்த இளைஞன் அங்கிருந்து சென்றுள்ளார். அந்த சம்பவத்தை பார்த்த மக்கள் அந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து போலீசார் விசாரனையில் ஈடுப்பட்டு குற்றவாளியை கைது செய்துள்ளனர். அவர் குரோம்பேட்டை பகுதியில் நெமிலிச்சேரியை சேர்ந்த பொன் பாக்கியராஜ். அவர் கடந்த நான்கு வருடங்களாக அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

ஆனால் சமீப காலமாக அந்த பெண் தன்னிடம் பேசாததால் அவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் நான் அந்த பையனை காதலிக்கவில்லை என்றும் அந்த பையன் தன்னை ஒரு தலையாக காதலித்ததாகவும் கூறியுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது அந்த பெண் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


Advertisement