வெளிநாட்டிலிருந்து குடும்பத்தினரை பார்க்க ஆவலுடன் வந்த நபருக்கு நடந்த சோகம் - அதிர்ச்சியில் குடும்பத்தினர்.

வெளிநாட்டிலிருந்து குடும்பத்தினரை பார்க்க ஆவலுடன் வந்த நபருக்கு நடந்த சோகம் - அதிர்ச்சியில் குடும்பத்தினர்.


Asan Saudi death in accident

தமிழ் நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அசன் முகமது. இவர் குடும்பத்தினரை பிரிந்து சவுதியில் கடந்த ஒரண்டுக்கு மேல் பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்தினரை காண ஆசையாக ஊர் திரும்பியுள்ளார்.

இதனையடுத்து சவுதியிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்துள்ளார். பின்னர் திருச்சி வந்த அவரை அவரது மனைவி, குழந்தை மற்றும் உறவினர்கள் அழைத்து செல்ல வந்துள்ளனர். அனைவரும் காரில் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

Asan

அப்போது கார் உளுத்தூர்பேட்டையை தாண்டியதும் காரின் பின் பக்க டயர் வெடித்து கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த தடுப்புகட்டையில் மோதியுள்ளது. இதில் அசன் முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உறவினர்கள் அனைவரும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அசன் மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிகழ்வு அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.