தமிழகம்

காதல் விவகாரத்தால் பறிப்போன சிறுமியின் உயிர்! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த பகீர் உண்மைகள்!!

Summary:

காதல் விவகாரத்தால் பறிப்போன சிறுமியின் உயிர்! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த பகீர் உண்மைகள்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி கணபதி நகரைச் சேர்ந்தவர் முருகேசன், மனைவி   சங்கிலியம்மாள். இந்த தம்பதியினருக்கு , கார்த்தி என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகேஷன் இறந்துள்ள நிலையில், முருகேஷன் மகனான கார்த்தி கட்டட வேலைப் பார்த்து  கிடைக்கின்ற  வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத்தை வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில்  முருகேசனின் இளைய மகளான காயத்ரி (வயது16) என்பவர் காதல் வலையில் சிக்கி, தன் காதலனுடன் வெகு நேரமாக பேசி வந்துள்ளார். இந்தச் சிறுமி செய்த செயலைக் கண்ட வீட்டார்கள் அடிக்கடி கண்டித்து வந்துள்ளனர். இதனையடுத்து நேற்று சிறுமி தன் காதலுடன் அதிக நேரம் பேசியதை பார்த்த சிறுமியின் பெரியம்மா மகனான பாலமுருகன் சிறுமியை அடித்து, கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். பிறகு சிறுமி
 படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள்  காயத்ரியின் கழுத்து நெறிக்கப்பட்டு உடைந்திருப்பதாக கூறினர். இந்நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பழனி நகர போலிஸார் பாலமுருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement