தமிழகம்

நமக்காக வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் பழனி அவர்களின் அழகிய குடும்பம்..! ஒரேநாளில் சரிந்த துயரம்.!

Summary:

Army man pazhani family photos

இந்தியா - சீனா எல்லையில் இரண்டு நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய  ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதனை தொடர்ந்து இந்திய வீரர்களின் பதிலடி தாக்குதலில் சீன வீரர்கள் 40 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ராமநாதபுர மாவட்டம் திருப்பாலைக்குடி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் பழனி.

இந்திய இராணுவத்தில் ஹவில்தாரராகப் பணியாற்றிவந்த இவருக்கு வானதி தேவி என்ற மனைவியும் பிரசன்னா என்கின்ற 10 வயது ஆண் குழந்தையும், திவ்யா என்கின்ற 7 வயது பெண் குழந்தையும் உள்ளனர். தனது கணவர் வீரமரணம் அடைந்தது குறித்து பேசிய தேவி, பிற்காலத்தில் தங்கள் மகனையும் ராணுவத்தில் சேர்க்க தனது கணவர் ஆசைப்பட்டதாக கூறி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தார்.

இந்நிலையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.


Advertisement