ஆபாச பேச்சு, பாலியல் சில்மிஷம்.. கண்ட இடத்தில் கைவைத்து., அரசுப்பள்ளி மாணவிகள் புகார்.! ஆசிரியர் கைது.!! Ariyalur Sendurai Andimadam Ayyur Govt School Teacher Jeyaraman Arrested Pocso Act

அரசுப்பள்ளியில் பயின்று வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வணிகவியல் ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை, ஆர்.எஸ். மாத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயராமன் (வயது 56). இவர் ஆண்டிமடம், அய்யூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றுகிறார். 

இந்த பள்ளியில், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில், ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெயராமன், மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேசுதல், பாலியல் ஆசையை தூண்டுவது போல நடப்பது, பாலியல் தொல்லை அளிப்பது என சில்மிஷ செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். 

Ariyalur

இந்த விஷயம் தொடர்பாக மாணவிகள் பெற்றோரிடம் புகார் தெரிவிக்கவே, மாணவிகளின் பெற்றோர் ஒன்றுதிரண்டு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து வணிகவியல் ஆசிரியர் ஜெயராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.