16 வயது சிறுமியை தாக்கிய பெண்மணி.. 13 வயது சிறுமியை., விசாரணையில் அதிர்ச்சி தகவல்.. பகீர் செயல்.!

16 வயது சிறுமியை தாக்கிய பெண்மணி.. 13 வயது சிறுமியை., விசாரணையில் அதிர்ச்சி தகவல்.. பகீர் செயல்.!


ariyalur-mother-attacked-a-girl

13 வயது சிறுமியை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக கூறி சிறுமியின் தாய், 16 வயது சிறுமியை சரமாரியாக தாக்கிய கொடூரம் நிகழ்ந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் அருகாமையில் 13 வயது சிறுமி ஒருவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால், அவரது தாய் பல இடங்களில் தேடியுள்ளார். இருப்பினும் சிறுமி கிடைக்காததால், பயந்துபோன தாய் தனது உறவினர்களின் வீட்டிற்கு சென்று தேடிய நிலையில், அங்கிருந்த பேருந்து நிலையத்தில் மகள் இருப்பதைக் கண்டு மகளை அழைத்து விசாரித்துள்ளார்.

அப்போது சிறுமி தான் அருகிலிருக்கும் 16 வயது சிறுமியுடன் வெளியூர் செல்வதாக கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ந்து போன தாய், 'தனது மகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தாயா?' என கூறி 16 வயது சிறுமியை பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

Ariyalur

இதனைக்கண்ட அங்குள்ள சிலர் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். மேலும் அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.