திருமணமான பெண்ணிடம் வம்பிழுத்து தாக்குதல்.. அரியலூர் அனிதாவின் அண்ணன் கைது..!Ariyalur Anitha Brother Arun Kumar Arrested By Police FIR About He Attacked Woman

மறைந்த மாணவி அனிதாவின் இரண்டாவது சகோதரர் பெண்ணிடம் வம்பிழுத்து, அவரை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை, குமுளூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி வசந்தி. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வசந்தியின் வீட்டுக்கு முன்பு அவர் நின்றுகொண்டு இருந்துள்ளார். 

அப்போது, நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் இரண்டாவது சகோதரர் அருண்குமார், வசந்தியை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். மேலும், அவரிடம் வம்பிழுத்து இருக்கிறார். 

Ariyalur

இதுதொடர்பாக அருண்குமாரை பலமுறை வசந்தி எச்சரித்தும் பலனில்லாத நிலையில், இந்த விஷயத்தை தனது கணவரிடம் தெரியப்படுத்தி இருக்கிறார். இதனையடுத்து, செந்தில் அருண்குமாரை கண்டிக்கவே, அருண்குமார் தம்பதியை தாக்கி இருக்கிறார். 

இதனால் பாதிக்கப்பட்ட தம்பதி, சம்பவம் தொடர்பாக செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகாரை ஏற்ற காவல்துறையினர் பெண் வன்கொடுமை சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அரியலூர் அனிதாவின் சகோதரர் அருண் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.