மதுபாரில் சத்தமாக பேசியதால் ஏற்பட்ட தகராறு.. பீர் பாட்டிலால் ஜேசிபி ஆபரேட்டர் குக்திக் கொலை..!



Argument caused by loud talking in Madhubar.. JCB operator Kuktik killed with beer bottle..!

திருவண்ணாமலை பகுதியில் வசித்து வருபவர் சரத் மற்றும் சதீஷ். இவர்கள் இருவரும் ஒட்டக்குடிசல் பகுதியில் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் மதுபாரில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் சத்தமாக பேசியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அதே மதுபாரில் ஆடையூர் பகுதியை சேர்ந்த 4 பேர் மது அருந்தியுள்ளனர். அப்போது சதீஷ் மற்றும் சரத் சத்தமாக பேசியதால் அந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அதனை கண்டித்து உள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Crime

இதனையடுத்து சரத் ஜேசிபி ஆபரேட்டரான தனது அண்ணன் சரவணனுக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். அங்கு விரைந்து வந்த சரவணன் எதிர் தரப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த நான்கு பேர் கொண்ட கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் பீர் பாட்டிலால் சரவணனை சரமாரியாக குத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் சரவணன் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பலியானார். மேலும் படுகாயம் அடைந்த சரத் மற்றும் சதீஷ் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்