இன்குபேட்டரில் இருந்த குழந்தையை பார்க்கச்சென்ற தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி! அரசு மருத்துவமனையில் பரபரப்பு!!

இன்குபேட்டரில் இருந்த குழந்தையை பார்க்கச்சென்ற தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி! அரசு மருத்துவமனையில் பரபரப்பு!!


ant on baby who got treatment at ingupettar

சங்கராபுரம் அருகே கடுவனூர் பகுதியில் வசித்து வருபவர் வாசுதேவன். இவரது மனைவி அலமேலு. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அலமேலுவுக்கு கடந்த 18-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குறித்த நாளுக்கு முன்னே குழந்தை பிறந்ததால், குழந்தையை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தை இன்குபேட்டர் கருவியில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் அலமேலு நேற்று இன்குபேட்டரில் இருந்த தனது குழந்தையை பார்க்க சென்றபோது குழந்தையின் மீது எறும்புகள் ஊர்ந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அங்கு பணியில் இருந்த நர்ஸிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அந்த நர்ஸ் குழந்தையின் உடம்பில் ஊர்ந்து சென்ற எறும்புகளை அகற்றினார்.

baby

இதனை குறித்து தகவலறிந்த வாசுதேவன் மருத்துவமனைக்கு சென்று தனது குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த வாசுதேவன் அங்கிருந்த கண்ணாடியை கையால் அடித்து உடைத்து தகராறு செய்துள்ளார். இதையடுத்து குழந்தையை சரியாக கவனிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி  வாசுதேவன் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையை சரியாக கவனிக்காமல் அலட்சியமாக இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.