வீட்டுக்கு வந்தா பேனா, புத்தகம் தாரேன்.. ஊர்கூடி சேர்ந்து காமக்கொடூரனை வெளுத்தெடுத்த சம்பவம்.!

வீட்டுக்கு வந்தா பேனா, புத்தகம் தாரேன்.. ஊர்கூடி சேர்ந்து காமக்கொடூரனை வெளுத்தெடுத்த சம்பவம்.!


Andra Pradesh Visakhapatnam School Girls sexual Tortured by Man Peoples Attacked him

புத்தகம், பேனா தருவதாக கூறி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தவர் பொதுமக்கள் பிடித்து அடித்து நொறுக்கப்பட்டு காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். 

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம், மல்காபுரம் பகுதியில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவிகளிடம், அப்பகுதியை சார்ந்த சின்னா ராவ் என்பவர், புத்தகம் மற்றும் பேனா தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். 

அவ்வாறு அவரின் பேச்சை கேட்டு வரும் சிறுமிகளுக்கு வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிந்தால், பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிடுவார்கள் என்று அச்சப்படும் மாணவிகள், இதனை வெளியே கூறாமல் இருந்து வந்துள்ளனர். 

Andra Pradesh

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சின்னா ராவ், இந்நடவடிக்கையை தொடர்ந்து செய்து வந்துள்ளார். இந்த விஷயத்தால் பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளி ஆசிரியரிடம் விசயத்தை தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, ஆசிரியர் உள்ளூர் மக்களிடம் விஷயத்தை கூறவே, உள்ளூர் மக்கள் சின்னா ராவின் வீட்டிற்கு திரண்டு சென்று, ஊர்கூடி வெளுத்தெடுத்து அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.