வட மாநில இளைஞர்கள் அராஜகம்.... ரயிலில் பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயற்சி..!anarchy-by-the-youth-of-the-northern-state-they-tried-t

திருமங்கலம் அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகையை கொள்ளையடிக்க முயன்ற வடநாட்டவர் குறித்து விருதுநகர் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியில் உள்ளவர் சுந்தரம். இவருடைய மனைவி லட்சுமி(51). இவர் திருநெல்வேலியில் இருந்து திருச்சிக்கு தனது கணவருடன் உறவினர் வீட்டிற்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார். ரயில் திருமங்கலம் அருகே ஆறுகண் பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது 25 வயது மதிக்கத்தக்க மூன்று வடநாட்டவர்கள் லட்சுமி கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றனர்.

அதில் ஒருவர் ரயிலில் அவசரச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி இருக்கிறார். லட்சுமி சுதாரித்துக் கொண்டதால் நகை தப்பியது. அவசர சங்கிலியை இழுத்ததால் ரயில் குண்டாற்று பாலத்தில் நடுவழியில் நின்றது. பின்னர் மூன்று வடநாட்டு இளைஞர்களும் ரயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். எனவே அரை மணி நேரம் ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த விருதுநகர் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதை தொடர்ந்து அரை மணி நேர தாமதத்திற்கு பிறகு ரயில் கிளம்பி சென்றது. பின்னர் மதுரை ரயில்வே நிலையத்தில் லட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் வடநாட்டவர் குறித்து மதுரை ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.