அண்ணியுடன் கள்ள உறவு... மூதாட்டி கொலையில் எப்படி தொடர்பு.? காவல்துறை விசாரணையில் வெளிவந்த உண்மை.!

அண்ணியுடன் கள்ள உறவு... மூதாட்டி கொலையில் எப்படி தொடர்பு.? காவல்துறை விசாரணையில் வெளிவந்த உண்மை.!


an-old-lady-was-murder-in-an-illicit-affair-police-arre

நாகப்பட்டினம் மாவட்டம் கீரைக்கொல்லைத் தெருவை சேர்ந்த 63 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தூரத்து உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் தெரிய வந்திருக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியில் மூதாட்டி சரோஜாதேவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக மூதாட்டியின் இளைய மகன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். காவல்துறையின் விசாரணையில் மூதாட்டியின் வீட்டிற்கு ஒரு தம்பதி வந்ததாக அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

tamilnaduஇது தொடர்பாக விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ் மற்றும் வள்ளிமுத்து ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினார். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.

tamilnaduகாவல்துறையிடம் வள்ளிமுத்து மற்றும் காளிதாஸ் ஆகியோர் மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். காளிதாசுக்கும் அவரது அண்ணன் மனைவியான வள்ளிமுத்துவுக்கும் இடையே தகாத உறவு இருந்திருக்கிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று நள்ளிரவு நேரத்தில் சரோஜா வீட்டிற்கு காளிதாஸ் மற்றும் வள்ளிமுத்துவும் சென்று இருக்கின்றனர். இதனை சரோஜாதேவி வன்மையாக கண்டித்து இருக்கிறார். மேலும் மூதாட்டி கத்தி கூச்சலிடவே காளிதாஸ் மற்றும் வள்ளிமுத்து இருவரும் சேர்ந்து தலையணையை வைத்து அழுத்தி மூதாட்டியை கொலை செய்துள்ளனர். மேலும் மூதாட்டி அணிந்திருந்த தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறை அவர்களிடமிருந்து 1.6 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் கைப்பற்றியது.