அந்த கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவன்.. நிச்சயம் பலிக்கும்.! நம்பிக்கையில் நடிகர் சூர்யா!!
பிள்ளைகள் இருந்தும் தனியாக வசித்த வயது முதிர்ந்த தம்பதியினர்.. உடல் நல குறைவால் மனமுடைந்து எடுத்த விபரீத முடிவு..!
பிள்ளைகள் இருந்தும் தனியாக வசித்த வயது முதிர்ந்த தம்பதியினர்.. உடல் நல குறைவால் மனமுடைந்து எடுத்த விபரீத முடிவு..!

பரமத்திவேலூர் வட்டம் வேலூர் பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் பரமசிவம் (72) மற்றும் அவரது மனைவி பஞ்சவர்ணம் (62). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் இருவரும் திருமணத்திற்கு பின் தனிக்குடித்தனம் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் பரமசிவம்-பஞ்சவர்ணம் தம்பதியினர் தனியாக வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவருக்கும் வயது முதிர்ச்சி காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளனர். இதில் பஞ்சவர்ணதிற்கு சக்கரை நோய் அதிகமானதால் அவரது இரண்டு விரல்கள் நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் வயதான காலத்தில் தனியாக சிரமபடுவதால் இருவரும் மனமுடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்து சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நீண்ட நேரமாகியும் பரமசிவம் மற்றும் பஞ்சவர்ணம் வெளியில் காணவில்லை என்பதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் முதியவர்களின் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு இருவரும் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து வேலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் பரமசிவம் மற்றும் பஞ்சவர்ணம் சடலத்தை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வயதான தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.