குடித்துவிட்டு போதையில் போட்டி போட்டு ஆட்டோ ஓட்டிய ஆட்டோ டிரைவர்... பலியான கல்லூரி மாணவி...!

குடித்துவிட்டு போதையில் போட்டி போட்டு ஆட்டோ ஓட்டிய ஆட்டோ டிரைவர்... பலியான கல்லூரி மாணவி...!


an-auto-driver-who-drove-an-auto-under-the-influence-of

குடித்துவிட்டு போதையில் தாறுமாறாக ஷேர் ஆட்டோவை ஓட்டியதால் பலியான கல்லூரி மாணவி.

திருப்பூரில் குடித்துவிட்டு போதையில் ஷேர் ஆட்டோவை  தாறுமாறாக ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவி பலியானார். பொது மக்களிடம் அடி வாங்காமல் தப்பப்பதற்காக மயக்கமடைந்தவாறு நடித்த ஆட்டோ டிரைவரை காவல் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் கல்லூரி சாலையில் வசித்துவரும் முருகேசன் என்பவர் மனைவி சங்காயி, மகள்கள் கோகிலா மற்றும் ஜனனி என நான்கு பேரும் மருத்துவமனை செல்ல குணசேகரன் என்பவரின் ஆட்டோவில் கல்லூரி சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர். ஹவுசிங் யூனிட் என்ற இடத்தில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மூன்று ஆட்டோக்களில் போட்டிப்போட்டுக் கொண்டு வந்தனர். 

அதில் ஒரு ஷேர் ஆட்டோ, முருகேசன் குடும்பதுடன் வந்த ஆட்டோ மீது வேகமாக மோதியது. இதில் இரண்டு ஆட்டோக்களும் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் முருகேசனின் முருகேசனின் மனைவி சங்காயி, மகள்கள், ஆட்டோ டிரைவர் குணசேகரன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். 

காயமடைந்தவர்களை பொது மக்கள் மீட்டு  திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகேசனின்‌ மகள் ஜனனி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அதிவேகமாக ஆட்டோவை ஓட்டி விபத்து எற்படுத்திய ஆட்டோ டிரைவரை பிடித்து பொது மக்கள் விசாரிக்கையில், குடிபோதையில் போட்டி போட்டுக் கொண்டு ஆட்டோவை ஓட்டியது தெரிய வந்தது. 

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆட்டோ டிரைவர் சின்ன துரையை சரமாரியாக அடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருப்பூர் பூத்தார் தியேட்டர் பகுதியை சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர் சின்ன துரையை கைது செய்தனர்.