அத்தைக்கு மீசை முளைக்கும் பார்முலா கைகூடுமா?.. வெளுத்து வாங்கிய டிடிவி தினகரனின் பரபரப்பு பேட்டி.! 

அத்தைக்கு மீசை முளைக்கும் பார்முலா கைகூடுமா?.. வெளுத்து வாங்கிய டிடிவி தினகரனின் பரபரப்பு பேட்டி.! 


ammk-ttv-dhinakaran-pressmeet

 

ஓ.பி.எஸ் தனது தவறை எண்ணி வருத்தப்படுகிறார் என்று கூறிய டிடிவி தினகரன், அத்தைக்கு மீசை பழமொழியை சொல்லி எடப்பாடி பழனிசாமியை மேற்கோளிட்டு பேசியிருந்தார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்திக்கையில், "டிடிவி தினகரன் - ஓ.பன்னீர் செல்வம் - பாஜக கூட்டணிக்கு இடமில்லை. அதுதொடர்பான விவாதம் தொலைக்காட்சிகளில் தான் நடந்து வருகிறது. 

அம்மாவின் தொண்டர்களாக நாம் அனைவரும் ஓரணியில் திரளுவோம், திமுகவை வீழ்த்துவோம் என ஓ.பி.எஸ் சொல்லியிருந்தார். அதற்கு நானும் கருத்தை வரவேற்பதாக தெரிவித்து இருந்தேன். இதனால் நாங்கள் கூட்டணி வைக்கப்போவதாக அர்த்தம் இல்லை.

ammk

ஓ.பன்னீர் செல்வம் தவறான பாதையை தேர்வு செய்ததை இன்று எண்ணி வருத்தப்படுகிறார். கண்கண்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் பலன் இல்லை. அதிமுக கட்சியின் அதிகாரம் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரிடமும் இல்லை. 

ammk

இருவரும் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால், இரட்டை இலைக்கான அதிகாரம் என்பது நீதிமன்றத்தின் முடிவுக்கு பின்னர் தான். இன்றைய நிலையில் இரட்டை இலையை யாரும் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. 

ammk

இவர்கள் இருவரும் தனித்தனியே இருப்பதால் அதிகாரம் எடுபடாது. தமிழ் மொழியில் உள்ள பழமொழியை போல அத்தைக்கு மீசை முளைப்பதெல்லாம் நாளைய பிரச்சனை., இன்று அத்தைக்கு மீசை இல்லை என்பதை போலத்தான்.

ஒருவேளை பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் பட்சத்தில், அம்மாவின் இரட்டை இலைக்கான மதிப்பு, மரியாதையை போன்றவை மக்கள் மத்தியில் குறையும். அதுவே எதார்த்தமாக இருக்கும்" என்று பேசினார்.