அரசியல் தமிழகம்

குக்கரோ, குண்டூசியோ எதோ ஒன்னு கொடுங்கப்பா!.. காத்திருக்கும் டிடிவி தொண்டர்கள்!

Summary:

AMMK symbol


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதேநாளில் காலியாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் 24 மக்களவை மற்றும் 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது. மேலும் அணைத்து கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

ttv cooker க்கான பட முடிவு

இந்தநிலையில் அமமுக-விற்கு  குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் சார்பில் கோரப்பட்டது.  அமமுக ஒரு கட்சியாக இதுவரை பதிவாகவில்லை என்பதால் அமமுக-விற்கு பொதுச் சின்னம் ஒதுக்குவது என்பது இயலாத காரியம் என தேர்தல் ஆணையம் கூறியது.  

அமமுக-வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து மார்ச் 25-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில் அமமுக-வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுத்துவிடும். 

இந்த நிலையில் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் எங்களுக்கு குக்கரோ.. குண்டு ஊசியோ.. எந்த சின்னம் கொடுத்தாலும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement