திடீரென வீசிய சூழல் காற்று..! செம்மண்ணுடன் சேர்ந்து பம்பரம் போல் சுழன்ற காற்று..! வைரல் வீடியோ.!



Air blowing video goes viral

இயற்கை சீற்றங்களில் ஓன்று காற்று. கஜா புயலில் அடித்த காற்றால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பு இன்று வரை சில இடங்களில் காணமுடிகிறது. அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது காற்று.

புயல் போன்ற நேரங்களில் மட்டும் இல்லமால், சாதாரண நிலையில் கூட காற்று சூழல் போல் மாறி பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள செங்கல்சூலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட காற்று சூழல் சுமார் 2 நிமிடங்கள் வரை நீடித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.

சுமார் 2 நிமிடங்களுக்கு வீசிய அந்த சூழல் காற்றில் செங்கல் சூளையில் இருந்த செம்மண் காற்றில் கலந்து பெரிய சூழலாக மாறியுள்ளது. பம்பரம் சுழல்வதுபோல் காற்று சுழன்று சுழன்று வீச அருகில் இருக்கும் பொருட்கள் காற்றில் பறக்கின்றது. இந்த காட்சியை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.