"வீடியோ கால் வா., நான் உன்னை பார்த்துகிறேன்" - பெண்ணுக்கு தொல்லை கொடுக்கும் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்..! முழு விபரம் உள்ளே..!

"வீடியோ கால் வா., நான் உன்னை பார்த்துகிறேன்" - பெண்ணுக்கு தொல்லை கொடுக்கும் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்..! முழு விபரம் உள்ளே..!


AIADMK MP Ravindranath Harassed Women Complaint by Gayathri Devi

 

ரவீந்திரநாத் தேர்தலில் காலம்காண்பதற்கு முன்பே அவரின் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், பின்னாட்களில் அவை மறைக்கப்பட்டன. இதற்கிடையில் தான் பெண் அவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.  

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி ரவீந்திரநாத் குமார். இவர் கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இவரின் வெற்றி செல்லாது என சமீபத்தில் வழக்கு ஒன்றில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் அவரின் எம்.பி பதவி கேள்விக்குறியாகியுள்ள நிலையில், வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியை சேர்ந்த பெண்மணி காயத்ரி தேவி. இவர் திருமணம் முடிந்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில், கடந்த 2021ல் கணவரிடம் விவாகரத்து பெற்று மாமியாரின் வீட்டிலேயே வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது தனது சொந்த ஊருக்கு சென்று வருவார். 

இவர் சிறுவயதில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் படித்து வந்த பள்ளியிலேயே பயின்று வந்த காரணத்தால், இவர்களின் நட்பு வட்டாரம் இன்று வரை தொடர்ந்து வந்துள்ளது. சுமார் 50 கொண்ட நண்பர்கள் இன்றளவும் வாட்ஸப்பில் குழு வைத்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். 

காயத்ரி தேவி ரவீந்திரநாத்திடம் சகோதரர் முறையில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அவரின் மனைவியும், காயத்ரி தேவியும் நல்ல தோழிகள் ஆவார்கள். இதனால் காயத்ரி தேவி அடிக்கடி ஓ.பன்னீர் செல்வம், அவரின் மகன் ரவீந்திரநாத் ஆகியோரின் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று வந்துள்ளார். 

இவர்களுக்கிடையே நல்ல இணக்கமான சூழ்நிலை நிலவி வந்துள்ளது. அனைவரும் குடும்பம் போல இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கடந்த சில ஆண்டுகளாக காயத்ரி தேவியிடம் அவதூறாக நடந்துகொள்ள தொடங்கியுள்ளார். 

AIADMK

குறிப்பாக விவாகரத்துக்கு பின்னர் காயத்ரி தேவியிடம் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும், நாம் திருமணம் செய்யலாம் என பல ஆசை வார்த்தைகளை கூறி வந்ததாக தெரியவருகிறது. ஒருசமயத்திற்கு மேல் நான் வீட்டிற்கு கார் அனுப்புகிறேன், நீ அதில் ஏறி வா என அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. 

அதற்கு மறுப்பு தெரிவித்த காயத்ரி தேவியை தொடர்பு கொண்ட ரவீந்திர நாத்தின் நண்பர்கள் காயத்ரி தேவியை அவதூறாக பேச தொடங்கியுள்ளனர். எதற்காக அண்ணா இப்படி நடக்கிறீர்கள்?. தாயும்-பிள்ளையுமாக நாம் பழகி இருக்கிறோம். இவ்வாறான சூழ்நிலையில் இவை நமக்கு தேவையா? என காயத்ரி கண்டித்து இருக்கிறார்.

இவற்றை தனது செவிக்கு ஏற்றாத ரவீந்திரநாத் காயத்ரி தேவியிடம் வீடியோ கால் பேசலாம் என ஆபாசமாக பேசி மிரட்டலும் விடுத்து இருக்கிறார். இவரின் செயல்பாடுகள் பொறுக்க இயலாது ஓ.பன்னீர் செல்வத்திடம் காயத்ரி தேவி முறையிட்டபோது, அவர் தான் கண்டிப்பதாக கூறி இருக்கிறார். 

ஆனால், தனது சொந்த தாயின் இறப்புக்கு பின் நடந்த காரியத்திற்கே அவர் வரவில்லை. போன் செய்தாலும் எடுப்பது இல்லை. நான் என்ன செய்வது? என கூறியுள்ளார். இதனால் உணர்வற்று இருக்கும் நபரிடம் நான் பேசினால் ஏற்றுக்கொள்வாரா? என்ற எண்ணத்தில் ஓ.பன்னீர் செல்வமும் இருந்துள்ளார். 

நாளுக்கு நாள் ரவீந்திர நாத்தின் செயல்பாடுகள் எல்லை மீறி, அவரின் நண்பர்களிடம் இருந்து அவன் எம்.பி., அவன் சொல்வதை கேள் என பல அழுத்தங்கள் பெறப்பட்டதை தொடர்ந்து, அவர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பதால், இன்று காயத்ரி தேவி தமிழ்நாடு காவல்துறை இயக்குனரிடம் புகார் அளித்தார். 

புகாரை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் நாளை வந்து ஆதாரங்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டதால் பேரில், நாளை இதுசம்பந்தமாக ஆவணங்களை அளிக்க திட்டமிட்டு இருக்கிறார். தான் இனி யாரின் மிரட்டலுக்கும் பயம்கொள்ளமாட்டேன் என சூளுரைத்துள்ள காயத்ரி தேவி, நாளை ரவீந்திரநாத்துக்கு எதிரான புகாரை உறுதி செய்யவுள்ளார். 

இந்த தகவலை காயத்ரி தேவி தனது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இதனால் தமிழக அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.