அரசியல் தமிழகம்

அ.தி.மு.க எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்!. விரைந்து செல்கிறார் பழனிச்சாமி!.

Summary:

அ.தி.மு.க எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்!. விரைந்து செல்கிறார் பழனிச்சாமி!.


மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு நேரில் அஞ்சலி செலுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை செல்லவுள்ளார். 

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ். இவருக்கு வயது 69, இவர் மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகரில் வசித்து வந்தார். இவருக்கு நள்ளிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

1972ம் ஆண்டு முதல் அதிமுக-வில் இருந்து வந்த ஏ.கே. போஸ், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பதிவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எம். சீனிவேலு போட்டியிட்டார். ஆனால் அவர் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே மரணம் அடைந்ததால் அங்கு  நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஏ.கே. போஸ் நிறுத்தப்பட்டு வெற்றிப்பெற்றார். 

மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸின் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பிற்பகல் 1 மணியளவில் மதுரை சென்று நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளார். பல அதிமுக பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Advertisement