நீங்கள் ஆவலுடன் காத்திருக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான நுழைவுசீட்டு வெளியானது!

நீங்கள் ஆவலுடன் காத்திருக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான நுழைவுசீட்டு வெளியானது!


admid-card-for-trb-exam

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் பதவிக்கு நேரடி நியமன தேர்வுக்கான நுழைவுச் சீட்டை ஆசிரியர் தேர்வு வாரியம்(Teacher Recruitment Board ) வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதனை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.

2018-2019ம் ஆண்டிற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 க்கான கணினி வழித் தேர்வு 27.09.2019, 28.09.2019 மற்றும் 29.09.2019 தேதிகளில் (காலை / மாலை) நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கான ஹால் டிக்கெட் (Admit Card) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in–ல் வெளியிடப்பட்டுள்ளது.

trb exam

தேர்வு எழுத காத்திருப்பவர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யும் வகையில் தற்பொழுது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை பிரிண்ட் எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுசீட்டுடனும், ஏதேனும் ஒரு ஒரிஜினல் அடையாள அட்டையுடன் தவறாமல் எடுத்து வர வேண்டும் என்றும். தேர்வு நாளன்று தேர்வர்கள் முற்பகல் தேர்விற்கு 07.30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் தேர்விற்கு 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.