
நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமான நடிகை சித்ரா சமீபத்தில், அவர் தங்கியிருந்த தனியார் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக வெளியான அறிக்கையில், சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார் என கூறப்பட்ட நிலையில், சித்ரா கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார் எனவும், இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கவேண்டும் எனவும் சித்ராவின் பெற்றோர் மற்றும் சித்ராவின் ரசிகர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக இந்த வழக்கை நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனால் சித்ராவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement