கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி அளித்த நடிகர் விஜய்சேதுபதி!! எவ்வளவு தொகை தெரியுமா??

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி அளித்த நடிகர் விஜய்சேதுபதி!! எவ்வளவு தொகை தெரியுமா??


actor-vijay-sethupathi-covid-donation

நடிகர் விஜய் சேதுபதி கொரோனா நிவாரண நிதியாக ரூ 25 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தற்போது  கொரோனா இரண்டாவது அலை தற்போது  பெருமளவில் பரவி கோரதாண்டவாடி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி தட்டுபாடு போன்றவை ஏற்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

 இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்புபணிகள் மற்றும் நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களை வாங்க நிதி தேவைப்படும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தங்களால் இயன்ற நிவாரண நிதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும்  நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி கொரோனா நிவாரண நிதியாக ரூ 25 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.