தமிழகம் சினிமா

45 வயதில் நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

Summary:

Actor vadivel balaji passed away

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொடர்ந்து அது இது எது என பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

சின்னத்திரை அல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகர் வடிவேல் பாலாஜி 15 நாட்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பு காரணமாக இருக்கைகளும் வாதத்தில் முடங்கிய நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர் சிகிச்சைக்குப் பிறகு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட வடிவேல் பாலாஜி இன்று தனது 45 வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நடிகர் வடிவேல் பாலாஜி அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரை வெள்ளித்திரை என ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகர் வடிவேல் பாலாஜி திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement