சினிமா

சீமான் கொடுத்த ஊக்கத்தால் புதிய இயக்கம் தொடங்கிய பிரபல நடிகர்.! இயக்கத்தின் பெயர் என்ன தெரியுமா.?

Summary:

சீமான் கொடுத்த ஊக்கத்தால் புதிய இயக்கம் தொடங்கிய பிரபல நடிகர்.! இயக்கத்தின் பெயர் என்ன தெரியுமா.?

காவிரி டெல்டா மாவட்டங்களில் இயற்கை வளங்களைக் காக்க தாய்நிலம் பாதுகாப்பு பேரமைப்பு தொடங்கப்பட்டுள்ளது என்று திரைப்பட இயக்குநரும், தமிழா் நலப் பேரியக்கத் தலைவருமான மு.களஞ்சியம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக களஞ்சியம் கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் இயற்கை வள கொள்ளைகளை இதற்கு முன்னர் செயல்பட்டு வந்த பல்வேறு இயக்கங்களால் தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கு முன்பு செயல்பட்டு வந்த மீத்தேன், பெட்ரோலிய மண்டல எதிர்ப்பு இயக்கங்கள் திமுகவின் பின்னால் சென்றுவிட்டதால் தமிழ் சமூகத்தை ஒன்றிணைத்து ஒரு பேரியக்கம் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே எனது தலைமையில் இந்த பேரியக்கத்தை உருவாக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊக்கம் அளித்தார்.

இந்த இயக்கத்திற்கு தமிழ் தேசிய தளத்தில் இயங்குகிற 20க்கும் அதிகமான இயக்கங்கள் ஆதரவு கொடுத்துள்ளன. இந்த பேரியக்கத்தில் இணைய  இந்த மண்ணின் மீது அக்கறை கொண்ட அனைவரையும் அழைக்கிறோம் என கூறியுள்ளார். 


Advertisement