தமிழகம்

வாயில் துணி வைத்து, கை கால்களை கட்டி.. சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக்கொன்ற கொடூரர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!

Summary:

Accust confession about Child jayasri murder

விழுப்புரம் சிறுமதுரை காலனியில் வசித்து வந்தவர் ஜெயபால். அவரது மனைவி ராஜு. இவர்களுக்கு ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கவுன்சிலர் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும் குடும்ப முன்பகை காரணமாக சிறுமி ஜெயஸ்ரீயை தீ வைத்து எரித்து கொடூரமாக கொன்றுள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  அதனை தொடர்ந்து முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் தாங்கள் கொலை செய்தது குறித்து தற்போது அதிர்ச்சி அளித்த வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதில் ஜெயபால் குடும்பத்திற்கும், எங்களுக்கும் கடந்த ஏழு வருஷமாகவே தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்தது.  மேலும் அடிக்கடி சண்டையும் ஏற்பட்டது.  நாங்கள் அரசியலில் இருக்கிறோம் என தெரிந்தும் அவர்கள் எங்களை பார்த்து பயப்படவில்லை. 

அதுமட்டுமின்றி ஜெயபால் இரண்டு பெட்டிக்கடைகள் வைத்து  சம்பாதிக்கிறார் என அவருக்கு திமிரு அதிகமாக இருப்பதாகவும் எங்களுக்கு தோன்றியது.  இந்நிலையில் ஜெயபால் முருகன் நிலத்திற்கு பக்கத்துல ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து சம்பாதிக்க ஆரம்பித்தார். அதனால் எங்களுக்கு அவர் மீது இருந்த கோபம் அதிகமாயிற்று.  இந்நிலையில் பிரச்சினை ஏற்பட்டு நாங்கள் ஜெயபாலனையும்,  அவரது மனைவி ராஜியையும் அடித்தோம். அவர் எங்கள் மீது அடிக்கடி போலீசில் புகார் கொடுப்பார். மேலும் எப்ப பிரச்சினை வந்தாலும் சிறுமி ஜெயஸ்ரீ எங்களை திட்டுவார். அதனால் அப்பெண்ணின் மீதும் கோபம் அதிகமாயிற்று.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அவர்கள் அவர் கடையில் நடந்த சண்டைக்கு நாங்கள்தான் காரணம் என அவர்கள் போலீசில் புகார் அளித்த சென்றனர். அப்போது பெட்டிகடையில்  இருந்த ஜெயஸ்ரீயின் வாயில் துணியை வைத்து வீட்டிற்குள் இழுத்துச் சென்று கை, கால்களை கட்டி மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி விட்டோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.


Advertisement