வேலூர் ஜெயில் கைதி போலீஸ் வேனில் இருந்து குதித்து தப்பி ஓட்டம்! சினிமாவை மிஞ்சிய சம்பவம்!accused escaped from van

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை அடுத்த செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். 42 வயது நிரம்பிய இவர் மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்பட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவால் நிலையங்களில் உள்ளன.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த அணைக்கட்டு பகுதியில் நடந்த கொலை வழக்கில் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் வழக்கு சம்பந்தமாக நேற்று வெங்கடேசனை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.

accused

இதனையடுத்து விசாரணை முடிந்து நேற்று அதிகாலை காஞ்சிபுரம் ஆயுதப்படை போலீசார் வெங்கடேசனை போலீஸ் வேனில் வேலூருக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது வாலாஜா டோல்கேட் அருகே உள்ள மேம்பாலத்தை வேன் கடந்து செல்லும் போது திடீரென வெங்கடேசன் வேனில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து போலீசார் தப்பி ஓடிய கைதி வெங்கடேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.